Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு… அரசு புதிய அதிரடி…!!!

உணவு  பொருட்களை தரமானதாகவும், விரைவாகவும் வழங்குதல், காலிப்பணியிடம் போன்ற பல்வேறு வழிமுறைகளை  உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உணவுப் பொருட்களை மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்டகார்டுதாரர்கள்  பயன்பாட்டில் இருக்கின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை   அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக முதியவர்கள் கைது செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இயந்திரங்கள் பழுது, இணைய இணைப்பு சரிவர கிடைக்காததால் சர்வர் பிரச்சனை போன்ற பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களின் விலை, அளவு உள்ளிட்டவை தகவல் பலகையில் தெரிவிக்கப் படுவதில்லை.

அத்துடன் இலவச அரிசி மிகவும் தாரமற்று  இருப்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் கட்டுனர் போன்ற பணியிடத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதால் முழு நேரம் செயல்பாட்டில் இயங்குவதில்லை எனவும் புகார்கள் வருகின்றன. மேலும் இதுதொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ரேஷன் கடைகள் சர்வர் பிரச்சினை அல்லது கைரேகை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு பதிலாக ரேஷன் கார்டில் குறியீட்டை ஸ்கேன் செய்து உணவுப்பொருள் வழங்கலாம் என்றும் அட்டை எண்ணை  இயந்திரத்தில் பதிவு செய்து பதிவேட்டில் ஒப்புதல் பெற்ற பின் உணவு பொருட்களை வழங்கலாம்  எனவும் கூறியுள்ளார்.

மேலும் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் பணியிடத்தில் 3176 காலிப்பணியிடம், கட்டுநர் பணியிடத்தில் 627 காலி பணியிடம் விரைவில் நிரப்பவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். ஏதேனும் புகார் தெரிவிக்க உடனே உணவுத்துறை அமைச்சர் 044 25671427, செயலர் 044 25672224 என்ற  எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என் கூறியுள்ளார்.

Categories

Tech |