தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுகிறது. இதனிடையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக மாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது, ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டும் பொருட்களை வாங்க உத்தரவிடுவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கை மூலம் தடுப்பூசி செலுத்து கொள்வோரின் எண்ணிக்கை உயரும். மேலும் இது குறித்து சோதனை நடத்தும்போது முதல் முறை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் சிக்கினால் எச்சரிக்கைப்படுவர். ஆனால் மீண்டும் அவர்கள் தடுப்பூசி கொள்ளாமல் இருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.