Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு திட்டம் மூலமாக மாநிலத்தில் இருக்கும் சாமானிய பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஒரு சில புதிய திட்டங்களை தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் நசிமுதீன் தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்வதற்கு மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் இருக்கும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உணவு வழங்கல் துறை, கூட்டுறவு துறை, நுகர்பொருள் வாணிப கழகம் போன்ற 3 துறைகளிடமும் ஒருங்கிணைப்பு இல்லாததால் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. மேலும் ரேஷன் வினியோகம் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் ஆய்வு கூட்டம் நடத்துகின்றனர். இதனைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தலா 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை நியமித்து ரேஷன் பொருட்களை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் இனி ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |