Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி இதுவும் கிடைக்கும்…. சூப்பர் தகவல்…..!!!

தமிழகத்தில் கடந்த மே 23-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக 1,997கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 9 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயன் பெறக்கூடிய வகையில் 227கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் மூலமாக அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாறக்கூடும்.

மேலும் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் தொகுப்பு நிலங்களாக உள்ள தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனாளிகளுக்கு நிலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அரசு செயலாளர் சத்தியமூர்த்தி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலமாக ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்திற்காக கிராமங்கள் தேர்வு செய்யப்படும்.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் இந்த வருடத்திற்கு 27 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. அவ்வகையில் பனை மரத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும். இதனால் மக்கள் பயனடைய முடியும். இதற்காக ஒவ்வொரு வருடமும் இலக்கு வைக்கப்பட்டு பனை விதைகள் விதைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இனிவரும் நாட்களில் ரேஷன் கடைகளில் இந்த திட்டத்தின் கீழ் புதிய பொருட்கள் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |