தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளை அஞ்சலில் அனுப்பும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது அஞ்சலில் பெற விரும்புவோர் 25 ரூபாய் கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு 20 ரூபாய், அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
ரேஷன் கார்டுகளை வழங்க அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், புதிய ரேஷன் கார்டுகளை அஞ்சலில் அனுப்பும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு தற்போது தமிழக அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் தற்போது அஞ்சல் மூலமாக அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.