Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. இனி ஆன்லைனில் புகார் அளிக்கலாம்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரேஷன் கார்டு மூலமாக இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பலருக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது. அதற்கு எங்கே புகார் அளிப்பது என்று மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இலவச ரேஷன் பொருட்கள் தேவை இருப்பவர்களுக்கு சென்றடையாமல் இருக்கிறது.

இந்நிலையில் மக்கள் கரீப் கல்யாண் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கு தகுதி உடையவர்களாக இருந்தும் பலனை பெற இயலவில்லை என்றால் அல்லது இலவச ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக எழுதி புகார் அளிக்கலாம். புகார் செய்ய ஹெல்ப் லைன் நம்பருக்கு போன் செய்யலாம். மேலும் மின்னஞ்சல் மூலம் புகார் செய்ய உங்களது புகாரை எழுதி உங்களது ரேஷன் கார்டு என்னுடன் ரேஷன் டிப்போ வின் பெயரையும் அனுப்ப வேண்டும். புகார் அளிக்க இலவச எண்ணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் படி கட்டணமில்லா எண்ணில் புகார் பதிவு செய்ய, 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04325665566, 04428592828 எண்ணை தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் மூலமாகப் புகார் தெரிவிக்க [email protected] என்ற முகவரி அல்லது https://nfsa.gov.in/State/TN என்ற வெப்சைட் மூலமாகவும் நீங்கள் நேரடியாகப் புகார் கொடுக்கலாம்.

.

Categories

Tech |