Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாகவும் மாத கடைசியில் பொருள்களை ஊழியர்கள் வழங்குவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த புகார்கள் அனைத்தும் அரசின் தனி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு பொருட்கள் வழங்கும் முறைகள் பற்றி கண்காணிக்க வேண்டும் என கூட்டுறவு துறைக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |