தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பரிசு பொருள்கள் கொண்ட தொகுப்புடன் ஒரு கரும்பு, வேட்டி சேலை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் பரிசுத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .