தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் சிறப்பு தொகைப்பிற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். முன்னதாக 27ஆம் தேதி முதல் டோக்கன்கள் வீடு வீடாக சென்று கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அரசு அதனை திடீரென மாற்றியுள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.