தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மார்ச் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை சிறப்பு பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதையடுத்து சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களை பெற குடும்ப அட்டைதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், அந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஆணையாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று சிறப்பு பொது நீட்டிப்பு திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஜனவரி மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை சிறப்பு பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.