ரேஷன் கடை ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதால் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
500 நியாய விலை அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் நாளை (12.01.2022) போராட்டம் அறிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பால சுப்ரமணியன் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
“தமிழக அரசு பொது மக்களுக்கு 20
பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருவதை வரவேற்கிறோம். அதே வேளையில், நியாய விலை கடைகளுக்கு மொத்தமாக கொண்டு வரும் பொருட்களின் அளவு குறைவாக உள்ளது. அதே நேரத்தில் வெல்லம் தரமற்றதாக உள்ளது.
இதனை பொதுமக்களுக்கு வழங்கும்போது பிரச்சனைகள் வருகின்றன .மேலும் பைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளில் அதிகாரிகள் தலையிட்டு சரி செய்ய வேண்டும். மேலும் 500 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரிபவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் போன்ற காரணங்களை வலியுறுத்தி நாளை ரேஷன் கடை பணியாளர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.