தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டில் உள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினரின் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேஷன் கடைக்கு செல்ல முடியாத நிலையில் தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பிய பொருட்களை வாங்கி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சிரமப்படுவோர், வேறொரு நபர் மூலம் வாங்குவதற்கான அங்கீகார படிவத்தை உணவு வழங்கல் துறையின் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதையடுத்து அந்த படிவத்தை உரிய முறையில் சரிபார்த்து, விரைந்து ஒப்புதல் தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.