Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…. மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ளது.இதனைத் தொடர்ந்து பொருட்கள் தரம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை திருப்பி அனுப்பலாம் என்று அரசு அறிவித்திருந்தது .மேலும் ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மறுபடியும் விநியோகம் செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டது.

இதனிடையே ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களை மளிகை பொருட்களை விலகி வாங்குமாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. மாத தொடக்கத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் அவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கினால் மட்டுமே அரசு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக கூட்டுறவுத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களுக்கு பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. பொதுமக்களை தாமாக முன்வந்து பொருட்களை வாங்குவதற்கான விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டும் தவிர மக்களை பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்த கூடாது. ரேஷன் பொருள்களை தவிர்த்து மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |