Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலிபணியிடங்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழக அரசு ஆண்டுதோறும் 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டபட உள்ளதாக முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபையில் மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்பி. ராஜா எழுப்பிய கேள்விக்கு, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்ததாவது, ஆண்டுதோறும் 500 நியாயவிலைக் கடைகளுக்கு, சொந்த கட்டிடம் கட்டுவதற்கு  தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக நியாயவிலை கடைகளுக்கு சொந்தமாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இதையடுத்து நியாயவிலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் பணிகளானது அதிவேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் பொது விநியோக துறையின் கீழ் ரேஷன் அட்டை மற்றும் நியாயவிலை கடைகள் தொடர்பாக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிற நிலையில், பொதுவிநியோகத்திட்டம்  மற்றும்  கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக்கடைகளில், கடந்தாண்டு செப்டம்பரிலும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ,பெண்கள் விற்பனையாளர்களாக மற்றும் கட்டுனர்களாக நியமிக்கப்படுதலை குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் அதில், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விற்பனையாளர்கள் தற்போது வேலை செய்யும் நியாயவிலைக் கடைகளில் ஒரு உதவியாளரையோ அல்லது கட்டுனரையோ நியமிக்கலாம் என்றும்  பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 

Categories

Tech |