Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்…. விண்ணப்பித்தவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.சமீபத்தில் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 5578 விற்பனையாளர் மற்றும் 925 கட்டுநர் என மொத்தம் 6503 பணியிடங்கள் இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பணிக்கு கடந்த நவம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கு தற்போது வரை ரேஷன் கடைகளில் உள்ள 6503 பணியிடங்களுக்கு மொத்தம் 2,29,807 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட வாரியாக ரேஷன் கடை பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அழைப்பு கடிதம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |