தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து தற்போது கணக்கிடப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து கணக்கிடப்படுகிறது. இது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக கணக்கிடப்படுகிறது.
அதன் பிறகு குடும்ப அட்டை வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு வரும்போது சோப்பு உள்ளிட்ட இதர பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. பொதுமக்களை கட்டாயப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.