தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பலர் பயனடைந்து வருகின்றனர். அரசு ரேஷன் அட்டைகளின் மூலமாக பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது அரிசி, சேலை, வேட்டி மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து பலரும் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மானியம் பெற விவசாயிகளை ஊக்குவிப்பது, பால் ஒரு லிட்டருக்கு 50 ரூபாய், கொப்பரைக்கு 250 ரூபாய் வழங்க வேண்டும் என்று கிராமம் தோறும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பிக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.