தமிழகத்தில் தென்னை விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர்களுடைய நலனை காப்பதற்கான தென்னை வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியாவில் முதல் முறையாக திமுக ஆட்சியில்தான் தென்னை விவசாயிகள் நலனை பாதுகாப்பதற்காக தென்னை நல வாரியம் அமைக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமயிலுகு பதிலாக தேங்காய் எண்ணையை அரசு வழங்கியது. தற்போது நியாய விலை கடைகளில் பாமாயில் தான் வழங்கப்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கடைகளில் மீண்டும் தேங்காய் எண்ணெய் வழங்கினால் தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே தென்னை விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்குமா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது