தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த நிலையில் இதனை சீர்படுத்தும் நோக்கத்தில் கூட்டுறவு துறை வரும் நாட்களில் நியாயவிலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விற்பனை செய்யக்கூடாது.
அப்படி ஒரு வேலை வாங்கும் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தால் அதனை திருப்பி அனுப்பவும் உரிமை உள்ளது. நியாயவிலை கடைகள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். இனி ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்கள் வழங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எதுவும் மக்களிடமிருந்து வராத வகையில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் செயல்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.