Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம்…. இனி பணம் செலுத்துவது ரொம்ப ஈசி…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய ‌பொருட்களை பெற்று பயன் பெறுகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய பொது முடக்கம் காரணமாக நியாய விலை கடைகளின் மூலம் அரசு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்றனர். அதோடு தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் நியாய விலை கடைகளின் மூலம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. இதனால் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நியாய விலை கடைகளில் அரசு வைபை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வைபை திட்டத்தின் மூலம் நியாய விலை கடைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் எளிதாக நெட்வொர்க் சேவையை பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து தற்போது நியாய விலை கடைகளில் புதிதாக மற்றொரு திட்டத்தையும் தற்போது அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. அதாவது நியாய விலை கடைகளில் G Pay மூலமாக பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி சென்னையில் உள்ள திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட 10 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நியாய விலை கடைகளில் உள்ள பொருட்களை ‌G Pay-ல் பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் சென்னையில் உள்ள நியாய விலை கடைகளில் தொடங்கப்பட்ட G Pay வசதி படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |