தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கு உணவுத் துறை மூலமாக அவசரகால டெண்டர்கள் விடப்பட வேண்டும். இந்நிலையில் தற்போது அந்த துறையின் உள் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஒன்றின் காரணமாக டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் பொருட்களின் இருப்பு மிக குறைவாகவே உள்ளது. மேலும் டெண்டர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரேஷன் கடைகளில் உணவுப் பொருள் வழங்கு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி,காலம் தாழ்த்தாமல் டெண்டர்களை சீக்கிரம் விட வேண்டும் என்று கூறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலை நீடித்துக் கொண்டே இருந்தால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.