Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….. உடனே போங்க…!!!!

தமிழகத்தில் அரசு வேலைக்காக பலரும் காத்திருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 164 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு நடத்தப்படாமல் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க https://drbmadurai.net என்ற இணையதளம் மூலம் நவம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த இணையதள பக்கத்தில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிக்கான குறைந்தபட்ச கல்வி, வயதுவரம்பு, இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த சந்தேகங்களை அறிய [email protected] என்ற இமெயில் மூலமாகவும், 0452 2531286 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் ஆள்சேர்ப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |