Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட…. அரசு வைத்த அதிரடி செக்…..!!!!!!!

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன் வாயிலாக மக்கள் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் ரேஷன் கடைகள் மூலமாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா 2-வது அலையின் போது 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இலவச மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்பட அரசு உத்தரவிட்டது. அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காமல் விடுபட்டவர்கள் அத்தியாவசிய பொருட்கள் பெறாதவர்கள் பயன் பெற்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் வழக்கமாக செயல்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

அதாவது காலை 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை, மதியம் 2:00 முதல் மாலை, 6:00 மணிவரை செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நேரத்தை பல்வேறு ரேஷன் கடைகளில் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குறித்த நேரத்தில் ரேஷன் கடைகள் திறந்து செயல்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |