தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். ஆகவே அனைத்து ஏழை, எளிய மக்களும் சமமாக மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்ற திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கைரேகை வைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனால் இணைய இணைப்பு/ தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் கால கட்டத்தில் கைரேகை சரிபார்க்கப்படாமலேயே அனைத்து மலிவு பொருட்களும் மக்களுக்கு வழங்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8.30 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் செயல்படும். இதர பகுதிகளில் காலை 9 முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.