Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. அரசு வைத்த அதிரடி செக்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, கூட்டுறவு துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று  வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்கள்  பல சிறப்பான  திட்டங்களை பெற்று வருகின்றனர். மேலும் அதனை தொடர்ந்து கடந்த  ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக  நிறைய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக  குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம்,  தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்த நிலையில், விரைவில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து தற்போது தமிழக கூட்டுறவு துறையின் சார்பில், ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேல் ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும் தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களானது வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் பொருட்களின் தரத்தை பற்றி பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணமாக  உள்ளது. எனவே இதை தவிர்க்க, தரமற்ற அரிசியை கடைகளுக்கு அனுப்பக் கூடாது. மேலும் அதை  மீறி வந்தால், அதை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என கடைபணியாளர்களுக்கு கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. மேலும், இவ்வாறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த நிலையில், சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை தலைமைச் செயலர் இறையன்பு, போன மாதம்  30-ஆம் தேதி ஆய்வு செய்துள்ளார்.

மேலும் அந்த ஆய்வில் உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராமனும் உடன் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உணவுத் துறை சார்பில், பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என உணவுத்துறை சார்பில் கூறப்பட்டதோடு, தற்போது ரேஷன்  கடைகளில் தரமான பொருட்களை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டந்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |