தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு சிலர் மாத கணக்கில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கின்றனர். அதனால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றது.
மேலும் தேவையானவர்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் முறைகேடாக கள்ள சந்தையில் பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கின்றது. இது பற்றி அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் பதுக்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீது கடத்தலுக்கு பயன்படும் வாகனங்கள் மீதும் இன்றிமையா பண்டங்கள் சட்டம் 1955 இன் படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு கூறியுள்ளது. மேலும் ரேஷன் கார்டுகள் 3 மாதத்திற்கு மேல் பொருட்கள் வாங்காமல் இருந்தாலும் அவர்களின் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டிருக்கிறது. பல மாநிலங்களில் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்து செய்ய பட்டு வரும் நிலையில் தமிழக மக்களுக்கு அந்த நிலைமை ஏற்படாது என கூறப்பட்டிருக்கிறது. மேலும் ரேஷன் பொருட்கள் தேவை இல்லாதவர்கள் தாங்களாகவே முன்வந்து ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கலாம் என அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகம். இதன் மூலம் தேவையில்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தகுதியானவர்களுக்கு கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.