Categories
மாநில செய்திகள்

தமிழக வங்கி பணிகளுக்கு தமிழ்மொழி கட்டாயமில்லை…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் வங்கி தேர்வுகளில் மாநில அலுவலக மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தேர்வுக்கு தற்போது தமிழ் மொழி கட்டாயமில்லை. இவ்வாறு வங்கி தேர்வு நடத்தும் ஐபிபிஎஸ் என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இவ்வறிவிப்பு வெளியானது தமிழக தேர்வர்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து தமிழக வங்கிகளில் பணிபுரிய 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்றும்  கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இது குறித்து அகில இந்திய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலர் ஜி.கருணாநிதி கூறியுள்ளதாவது, தமிழகத்தில் முன்னதாக வங்கி பணியிடங்களில் 20% முதல் 30% வரையிலான வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வந்தனர். ஆனால் சமீப காலமாக இந்த எண்ணிக்கையானது  50% ஆக அதிகரித்துள்ளது. மேலும்  கிராமங்களில் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் அதிகமாக பணிபுரிகின்ற சூழலில், கிராம மக்களுக்கு வங்கி சேவை பெறுவதில் அதிக சிரமமாக உள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் பணியாற்றும் வெளி மாநிலத்தவர்கள் வாடிக்கையாளர்களிடம் தங்களுக்கு தமிழ் தெரியாது என்று கூறி, மற்றொரு வரை அணுகுமாறு கூறுகின்றனர்.  இதனால் பணியில் சேரும் வெளி மாநிலத்தவர்கள்,  தமிழ் மொழியை கற்றுக்கொள்ளுவதற்காக 3 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. மேலும்  கொடுக்கப்பட்ட இந்த 3 மாதத்திற்குள் கற்றுக் கொள்ளவில்லையென்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படாமல், மேலும்  3 மாத கால அவகாசம்  கொடுக்கப்படுகிறது.

 

Categories

Tech |