Categories
மாநில செய்திகள்

“தமிழகம் வருவதற்கு இனி இ பாஸ் கட்டாயம்”…. வெளியான அவசர உத்தரவு….!!!!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று கால் பதித்துள்ளது. இது மற்ற வைரசை விட 70% வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் பன்னாட்டு விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வெளி மாநிலங்களிலிருந்து விமானத்தின் மூலம் தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும் கேரள மக்கள் தமிழ்நாடு வரும்பொழுது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டகொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் கொண்டு வர வேண்டும். குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் நபர்கள் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

Categories

Tech |