Categories
மாநில செய்திகள்

தமிழக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…. இனி இது கட்டாயம்….. டிஜிபி சைலேந்திரபாபு…..!!!!

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விபத்துக்கள் நடக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் சாலை விதிமுறைகள் தான். அதனால் நாட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை குறைக்கும் விதமாக அபராதத்தை அதிகரிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்தது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதனைப் போலவே ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு வரும் போலீசிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். போலீஸ் அடையாளத்தை காரணமாக கூறி வாக்குவாதம் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |