நிரந்தர ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 12 பணிமனைகளில் காலியாக உள்ள 400 ஓட்டுநர் பணியிடங் களுக்ககு தற்காலிக ஓட்டுனர்களை நியமிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், 24 வயது முதல் 45 வயதுகுட்பட்டவர்கள் சென்னை பல்லவன் சாலை, விரைவு போக்குவரத்து கழக துணை மேலாளர் என்ற முகவரிக்குள் சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 12 ஆகும். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு தேர்ந்தெடுக்கப்படும் ஓட்டுனர்கள் ஒரு வருட ஒப்பந்தம் அல்லது அரசு கூறும் காலம் வரை தற்காலிகமாக பணியாற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
அதாவது நிரந்தர ஓட்டுநர்களை நியமிக்க வேண்டுமே தவிர தற்காலிக ஓட்டுனர்களை நியமிக்க கூடாது என அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளது. அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை நிரந்தர ஓட்டுநர்களை கொண்டு நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலி பணியிடங்களை தனியார்களை கொண்டு அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.