தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி விவசாயிகள் அதிக மகசூலை பெறும் விதமாக நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு இவர்களுக்கு பல வகையான விருதுகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை நிரப்பி 100 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் சுய விபரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் விவசாயிகள் ஏற்றுமதி செய்த விலைப் பொருளின் விலை, ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகள், பயிர் விளைவிக்க மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.