Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. “இனி இந்த உரங்களை பயன்படுத்துங்க”…. அமைச்சர் கொடுத்த அட்வைஸ்…..!!!

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப் பொருளான பாஸ்பரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உள்நாட்டில் டிஏபி உரம் உற்பத்தி குறைந்துள்ளது. பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இறக்குமதியின் போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுரகங்களில் இட நெருக்கடி போன்ற காரணங்களினால் டிஏபி உரத்தை துறைமுகத்தில் இறக்கி மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சில சமயம் தாமதம் ஏற்படுகிறது.

எனவே இது குறித்து மத்திய அரசின் உரத்துறையானது, டிஏபி உரத்துக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடி உயரமாக இட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது. அதன்படி 9 கிலோ தழைச்சத்தும், 23 கிலோ மணிச்சத்து உள்ள 50 கிலோ டிஏபி உரத்திற்கு மாறாக அடி உயரமாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை மூன்று வழிகளில் பயன்படுத்தலாம் அதாவது. அதனைத் தொடர்ந்து பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் கந்தகசத்து காம்ப்ளக்ஸ் உரத்தில் 13% சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 11% உள்ளதால் பயிரின் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கும். இதனால் டிஏபி இட்ட வயலை போன்றே பயிர் வளர்ச்சி செழித்து விளைச்சலும் அதிகரிக்கும். தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடையில் காம்ப்ளக்ஸ் உரமும் சூப்பர் பாஸ்பேட் உராமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடியுரமாக பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |