மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக நிதியை பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார். அந்த வகையில் புத்தாண்டு தினத்தில் தலா இரண்டாயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது. இதில் தமிழக விவசாயிகளுக்கு 740 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஜனவரி-1 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த நிதி சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ஒரு வாரத்திற்குள் உதவித்தொகை செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.