Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…! பயிர் காப்பீடு செய்ய…. எந்தெந்த மாவட்டத்திற்கு எது கடைசி தேதி…. முழு விவரம் இதோ…!!!

2022-2023ம் ஆண்டு குளிர்கால பருவப் பயிர்களை பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய வேளாண்மை – உழவர் நலத்துறை விவசாயிகளை கேட்டுள்ளது. இதன்படி சம்பா நெல், நிலக்கடலை, மக்காச்சோளம்-III, கம்பு, ராகி, சூரியகாந்தி, எள் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்யலாம். இதில், சம்பா நெல்லுக்கு திண்டுக்கல், குமரி, நாமக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும், கோளத்திற்கு இராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 15க்குள் காப்பீடு செய்ய வேண்டும்.

நிலக்கடலைக்கு திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 13, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தர்மபுரி, இராமநாதபுரம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. பொதுசேவை மையங்கள், கூட்டுறவு சங்கம், வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

Categories

Tech |