தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மானிய விலையில் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படுகிறது. இந்நிலையில் தென்னை,நெற்பயிர்கள் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் உரங்கள் வழங்கப்படும் என்று வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மானியத்தைப் பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு துத்தநாக சல்பேட் 10 கிலோ அல்லது ஜிப்சம் 200 கிலோ என்ற அளவில் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. அரசின் இந்த சலுகையை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.