Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“தமிழணங்கு”… இந்தித் திணிப்புக்கு எதிராக ட்விட் செய்த ஏ.ஆர்.ரகுமான்…!!!

இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் போட்டோ ஸ்டில் தற்போது வைரலாகி வருகின்றது.

அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி பேசாத மாநிலங்கள் இனி இந்தி பேச வேண்டும் எனவும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய பேச வேண்டும் எனவும் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சால் தென்னிந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது. இணையத்தின் மூலம் தங்களின் எதிர்ப்புகளை பலரும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, பல்துறைப் பிரமுகர்கள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் போட்டுள்ள ஸ்டில்லை பார்த்து அவர் மறைமுகமாக இந்தியை எதிர்ப்பது போல் இருப்பதாக பலரும் கூறி வருகின்றார்கள். அந்த புகைப்படத்தில் தமிழ்தாய் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கின்றார். தமிழ் தாய்க்கு கீழே பாரதிதாசன் எழுதிய “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாடல் வரி இடம்பெற்றிருக்கின்றது. ஏ.ஆர்.ரகுமானின் இந்த ட்விட்டர் பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |