Categories
மாநில செய்திகள்

தமிழத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கால அட்டவணைப்படி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும்.

பாடத்திட்டம் மற்றும் அப்போதைய சூழல் குறித்து முடிவு செய்து பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இந்த வருடம் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும். எனவே மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும். தொடர்ந்து பேசிய அவர், பாலியல் தொடர்பான புகாரை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது. இதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். தவறு இருக்கும்  பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |