ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படம் பற்றி ஹர்பஜன்சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ஜான் பால்ராஜ் மற்றும் சாங் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரண்ட்ஷிப். ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழனின் தாய்மொழி கீழடி, தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னை மடி. எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த summer நம்ம படம் #friendship வருது. தளபதி தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம்” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.