ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் 160 கோடியில் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பேருந்து நிலையம் முழுக்க முழுக்க மாநகர அரசு பேருந்துகள் மற்றும் நின்று செல்லக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே மாநகரப் பேருந்துகளுக்கு தனியாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் இதுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய பெரியார் பேருந்து நிலைய சுற்று சுவர்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Categories