சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கீழடியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டது. அதில் சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், மட்பாண்டங்கள், மணிகள், பாசி ஆகிய பழங்காலப் பொருட்கள் கிடைத்தன.
மேலும் அகரம், கொந்தகையிலும் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக ஒரு குழி கீழடியில் அகழாய்வுக்காக தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.