Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால பானைகள் சேதமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு சேதமுற்ற நிலையில் முதலாவது குழியில் சிறிய பானையின் வாய்ப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பானையின் பகுதி சிவப்பு கலரில் உள்ளது.

அதே போல் இரண்டாவது குழியில் பழங்கால பெரிய பானையில் அடிப்பகுதி சேதமுற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கருப்பு நிறத்தில் ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3-வது குழி தோண்டப்பட்ட போது மணிகள், பாசி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |