சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிறிய கிண்ணங்கள், மண்பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் மண்பானைகள், ஓடுகள், முதுமக்கள் தாழி என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது குழி கீழடியில் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வந்தது. அதில் 9 அடி ஆழத்தில் சேதமுற்ற முறையில் சிறிய கிண்ணங்கள், சிறிய பானைகள் மற்றும் பழங்கால வெள்ளை பாசிகள் ஆகியவை கிடைத்துள்ளது.
அதிக மண்பாண்ட ஓடுகள் சேதமுற்ற நிலையில் கிடைத்துள்ளது. பழங்கால வெள்ளை பாசிகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்துள்ளது. இதையடுத்து மேலும் சிறிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரியவருகிறது. இதனால் சல்லடையில் குழிக்குள் அள்ளிய மணலைப் போட்டு பணியாளர்கள் சலித்து வருகின்றனர்.