Categories
தேசிய செய்திகள்

தமிழர்கள் குருபையில் வீசும் பொருள்…. புற்றுநோயை அழிக்குமா…? ஆராய்ச்சியாளர்கள் வியப்பு…!!

குப்பை என்று தூக்கி வீசும் பொருளில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய மருந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழர்கள் அதிகம் எலுமிச்சம் பழத்தை அன்றாடம் பயன்படுத்துவார்கள். ஜோதிடம் முதல் அன்றாட உணவு வரை தமிழர்களிடத்தில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோன்று குப்பையில் போடும் எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களையும் தர வல்லது. உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை தீர்க்கும் மருத்துவ குணமுடையது. எலுமிச்சை தோலை சீவி போன்று டீ தயாரித்து குடிக்கலாம். இதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

ஒரு சில பழங்கள் மட்டுமே எல்லாவித பயன்களையும், மருத்துவ குணமும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் எலுமிச்சையும் அடங்கும். இதன் முழு பாகமும் பல மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுகிறது. இதில் விட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. நாம் எதை சாப்பிட்டாலும் புற்றுநோய் வந்து விடுமோ என்கிற பயம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

ஆனால் புற்றுநோயின் அபாயத்திலிருந்து நம்மை காக்க எலுமிச்சை தோல் மட்டுமே போதும். உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்ய இது பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நாம் குப்பை என்று தூக்கி போடும் எலுமிச்சை தோலில்  புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய சக்தி இருப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள்  ஆச்சரியப்பட்டுள்ளனர்.

உடலை சுத்தம் செய்யும் எலுமிச்சை தோல்:

எலுமிச்சை தோலிற்கு கல்லீரல், பெருங்குடல், ரத்தத் தந்துகிகள் ஆகியவற்றில் தேங்கி உள்ள அழுக்குகளை முழுவதுமாக வெளியேற்றும் தன்மை உள்ளது.

1.முதலில் எலுமிச்சையை நன்றாக அலசிக் கொள்ளவும். பிறகு அதை வெட்டி சாராய் தனியாக பிழிந்து எடுத்து கொண்டு ஒரு ஜாடியில் போடவும்.

2.பின்னர் அவை மூழ்கும் அளவிற்கு வெள்ளை வினிகரை அதில் சேர்க்க வேண்டும்.

3.இரண்டு வாரம் கழித்து, எலுமிச்சை தோல் ஊறிய தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு தினமும் சமமான அளவு இந்த சாற்றை நீரில் கலந்து குடித்து வந்தால் கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகி விடும்.

Categories

Tech |