இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நம்மிடமிருந்து தொடர்ந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசன் ஆக்குவது இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இது சினிமாவிலும் நடக்கும் என பேசினார்.
இதுகுறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, ராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? எஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியதுதான். இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களில் ஒன்றியம். இதை இந்திய அரசியலமைப்பு சட்டமே கூறுகின்றது. இதுபோல பலவற்றை கூறிய கருணாஸ் இறுதியில் கலை மக்களுக்கானது. கலை பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது. அதை மாற்ற நினைப்பதும் அதை தனது ஆக்கிக் கொள்ள நினைப்பதும் மானுடன் அறத்திருக்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம் என அறிக்கையில் கருணாஸ் கூறியுள்ளார்.