தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகரித்து உள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பாரம்பரிய பெருமை மிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீர கலை யான சிலம்பத்தை உலகறிய செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சேர்ந்திட முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின்படி கோரப்பட்டது.
அதனை ஏற்று சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத்துறை அங்கீகரித்து புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழான விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஊக்குவித்தல் என்ற வகையில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.தமிழரின் வீர விளையாட்டான சிலம்பம் அங்கீகரிக்கப்பட்டது தமிழினத்திற்கு பெருமை என்று அவர் தெரிவித்துள்ளார்.