Categories
மாநில செய்திகள்

தமிழில் அர்ச்சனை செய்ய…. விரைவில் “போற்றி புத்தகங்கள்”- அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், இன்று சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

இவ்வாறு அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய போற்றி புத்தகங்கள் விரைவில் 536 கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 14 வகையான அர்ச்சனை புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது என்று கூறிய அவர், தமிழில் குடமுழுக்கிற்கென்று குடமுழுக்கு திருப்பணிக்குழு என்று ஒன்று அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |