Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கே…. அரசு வேலையில் முன்னுரிமை…. அரசாணை வெளியீடு…!!!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் . தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித்தேர்வர்களுக்கு  20% இடஒதுக்கீடு பொருந்தாது எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.  தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீட்டில் நியமனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

வேறு மொழிகளில் படித்து தேர்வு மற்றும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. பட்டயப்படிப்பு ,பள்ளிப் படிப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என அனைத்தும் முழுவதுமாக தமிழ் படித்திருக்க வேண்டும்.  தமிழில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே இட ஒதுக்கீட்டில் நியமனம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |