Categories
சினிமா

தமிழில் வரும் அமீர்கான் படம்….. எது தெரியுமா?…. வெளியான மாஸ் அப்டேட்…!!!

தமிழ் படங்கள் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து சமீபகாலமாக வெளியிடப்படுகின்றன. அதனைப் போல பாகுபலி வெற்றிக்கு பிறகு தெலுங்கு படங்களை தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகரான அமீர்கான் நடிப்பில் தயாராகி உள்ள “லால்சிங் சத்தா” இந்தி படத்தை உதயநிதி தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்.

இந்த படம் 1994 ஆம் ஆண்டு ஸெமிக்ஸ் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் நடித்து “பாரஸ்ட் கம்ப்” என்ற ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமைக்காக உருவாக்கி உள்ளது. இந்த படம் இந்தியில் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகியதை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார்.

Categories

Tech |