Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழீழ உறவுகளின் கண்ணீரை…. தமிழக அரசு துடைத்துள்ளது…. பாராட்டு தெரிவித்த வைகோ…!!!

சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுடைய நலனுக்காக 317.42 கோடி அறிவித்துள்ள முதல்வருக்கு வைகோ பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதில், “கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால் கடல் கடந்து வாழும் ஈழத் தமிழர்களின் கண்ணீரால் தான் என்று அன்றே அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். அந்த தமிழீழ உறவுகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுள்ளது. பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |