உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்துவதற்கும் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர் நிர்வாகிகள் சந்தித்து வழக்கறிஞர் சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வழக்காடு மொழியாக தமிழை கொண்டுவர சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ,வழக்கறிஞர்கள் மாத உதவித்தொகை வழங்குவது ,வழக்கறிஞர்களுக்கும் அரசு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.